Friday, August 19, 2011

'பேஸ்புக்' இல் உலவும் கிறீஸ் பூதம்

சமுக இணையத்தளமான 'பேஸ்புக்' ஊடாக கிறீஸ் மனிதன் என்று தம்மை இணங்காட்டடிக் கொள்ளும் பிரச்சாரத்தை சிலர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிறீஸ் யக்கா (கிறீஸ் பூதம்), கிறீஸ் மேன் (கிறீஸ் மனிதன்) என்பன போன்ற பெயர்களில் பேஸ்புக்கில் பலர் கணக்குகளை திறந்துள்ளதாக சிங்கள இணையத்தளங்கள் சில செய்திகள் வெளியிட்டுள்ளன.

மர்ம மனிதர்கள் ( கிறீஸ் யக்கா) தொடர்பாக வதந்திகளை பரப்புவோரை பொலிஸார் கைது செய்வதாக அறிவித்துள்ள போதிலும் பேஸ்புக்கில் உலவும் மர்ம மனிதர்கள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com