Tuesday, August 30, 2011

'தகவல்களை வெளியிடு' நீர்கொழும்பில் கருத்தரங்கு.

தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை தொடர்பாக 'தகவல்களை வெளியிடு' என்ற தொனிப் பொருளில் நீர்கொழும்பு ருக்மணிதேவி ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கருத்தரங்கொன்று நடைபெற்றது இதனை சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பின் கம்பஹா குழவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்த்தர் பிரிட்டோ பெர்னாந்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரபல ஊடகவியலாளரரும் எழுத்தாளரும் மொழிப் பெயர்ப்பாளருமான காமினி வியன்கொட, ஊடகவியலாளர் குசல்பெரேரா,சட்டத்தரணி சுதர்சன குனவர்தன, சட்டத்தரணியும் ஊடகவியலாளரருமான ஜனரஞ்சன ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலேயே மக்கள் தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். தமது உரிமை தொடர்பாக எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். வெறும் மனிதர்களாக நாங்கள் வாழக் கூடாது. உரிமைகளை பெற்றுக் கொள்ளும் பிரஜைகளாக வாழ வேண்டும் என்று பிரிட்டோ பெர்னாந்து அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேயின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவை போன்று எமது மக்களும் எழுச்சி பெறவேண்டும். மக்கள் அறிவின் மூலமாகவும் தகவல்கள் பெறுவதன் மூலமாகவும் பலம் பெற வேண்டும்.

மறைத்து வைப்பதற்கான விடயங்கள் இருப்பதன் காரணமாகவே அரசாங்கம் தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமையை வழங்க மறுக்கிறது என்று ஊடகவியலாளர் காமினி வியன்கொட அங்கு உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் குசல்பெரேரா அங்கு உரையாற்றுகையில், தகவல்ளை அறிந்து கொள்வதற்கான உரிமையை வழங்கினால் நாட்டின் பாதுகாப்புக்குஅது குந்தகமாக அமைந்து விடும் என்று அரசு கூறுகிறது. இந்தியாவிற்கு நாட்டின் பாதுகாப்பு எமது நாட்டைவிட அச்சுறுத்தலாக இருந்தபோதிலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை சிறப்பாகப் பேணப்படுகிறது.

தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை மனித உரிமையாகும். பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்பன அமைக்கப்பட்டிருப்பது மக்களை பாதுகாப்பதற்கும் நீதியை நிலை நாட்டுவதற்குமாகும் என்று சட்டத்தரணி சுதர்சன குனவர்தன அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

படம்-1 ஊடகவியலாளர் குசல்பெரேரா
படம்-2 சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்த்தர் பிரிட்டோ பெர்னாந்து
படம்3 ஊடகவியலாளரரும் எழுத்தாளருமான காமினி வியன்கொட
படம்-4 சட்டத்தரணி சுதர்சன குனவர்தன
படம்-5 கூட்டத்தில் கலந்து கொண்டோரில் ஒருபகுதியினர்








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com