குடிபோதையில் வாகனம் செலுத்திய குறறச்சாட்டில் ஒபாமாவின் சிறிய தந்தை கைது.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் சிறிய தந்தை ஒனியன்கோ ஒபாமா, குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க மாஸாசுஸெட்ஸ் மாநிலத்தில் ஒனியன்கோ (67வயது)பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, தனக்கு பிணை வழங்க ஏற்பாடு செய்ய வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுக்கப் போவதாக தெரிவித்தார். அவர் நிறுத்த அடையாளம் ஒன்றை அலட்சியம் செய்து காரை செலுத்தி பொலிஸ் வாகனமொன்றில் மோதியதையடுத்தே தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர் பராக் ஒபாமாவின் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒனியன்கோ ஆவார்.
குடிபோதையில் அலட்சியமாக காரை செலுத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கென்ய பிரஜையான ஒனியன்கோவிற்கு ஏற்கனவே அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க பிரிவு நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment