Wednesday, August 10, 2011

நீண்டகால இலங்கை பிரித்தானிய உறவை வலுவாக்க உதவுவேன்.

இலங்கைக்கான புதிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபி ப்ளொச் பேசுகையில் “நான் ஒரு நல்ல தருனத்தில் இந்தப் பதவியை ஏற்றுள்ளேன். நான் நீண்டகாலமாக இலங்கையுடன் பிரித்தானியா பேணிவரும் உறவைப் வலுவாக்க உதவுவேன்” என்று கூறினார்.

ரொபி ப்ளொச் இலங்கையிலிருந்து சென்ற பிரதி உயர்ஸ்தானிகரின் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் இவர் முன்னால் பிரித்தானிய ஆசிரியரும் சார்புநிலை அதிகாரியுமாவார். இவர் பிரித்தானிய பல்கலைக்கழகத்தின் முதல்நிலை ஆங்கில மற்றும் ஹிஸ்பானிக் பட்டதாரியுமாவார். அத்துடன் பிரித்தானிய கிங்ஸ் கல்லூரியில் தனது முதுமானிப் பட்டத்தைப் பெற்றார்.

ரொபி ப்ளொச் பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் 2000 ம் ஆண்டு இணைந்து கொண்டு குற்றவியல், சீர்திருத்தக் கொள்கை, சரணடைதல் மற்றும் குடிவரவு உட்பட பல்வேறுபட்ட துறைகளில் பணியாற்றி உள்ளார். அத்துடன் இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறுகிய கால ஒப்பந்தத்தில் 2002 தொடக்கம் 2003 வரை பணியாற்றினார்.

2004ம் ஆண்டு பிரித்தானிய கோம் ஒப்பிஸை விட்டுச் சென்ற அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொமென் வெல்த் இயக்குனரகத்தில் (FCO) அணித் தலைவராக 2005 ஆண்டுவரை பணிபுரிந்தார்.

அத்துடன் 2005 ஆண்டு தொடக்கம் 2007 ம் ஆண்டுவரை வெளிநாட்டு விபகார ஆலோசகராக பிரித்தானிய பிரதமர் ஜோன் பிரஸ்கோ அவர்களுக்கு பணியாற்றியதுடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரித்தானிய தலைமைத்துவம், சீன பிரித்தானிய உறவு, வர்த்தகம் என பல்வேறு துறைகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இதற்கு முதல் ரொபி மாட்ரிட்டிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பதில் அரசியல் துறை தலைவராகவும், முதல் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரொபி தனது மனைவி கேட் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இலங்கையில் தனது பொறுப்பை ஏற்றுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com