Monday, August 22, 2011

பாலியல் ஆற்றலை அதிகரிக்க மருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பாலியல் ஆற்றலை அதிகரிக்கும் மருந்து வகைகளை கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பாலியல் தொடர்பான எந்தவித பிரச்சினையும் இல்லாதவர்கள் கூட பாலியல் ஆற்றலை அதிகரிக்கும் மருந்து வகைகளை பயன்படுத்துவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிரதான வைத்திய அதிகாரி சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் மருந்துச் சீட்டின்றி மருந்து விற்பனை நிலையங்களில் இந்த மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதாகவும் வைத்தியர்களின் ஆலோசனையின்றி பாலியல் தொடர்பான மருந்து வகைகளை பாவிப்பதால் பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் வைத்திய அதிகாரி சாந்த ஹெட்டியாராச்சி மேலும் எச்சரித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com