Tuesday, August 16, 2011

ஆஸ்திரேலியாவில் வங்கி கடனட்டை மோசடியில் இலங்கையர் கைது!

அவுஸ்திரேலியாவில் வங்கி அட்டை மோசடிகளில் ஈடுபட்ட இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியா முழுவதிலும் வங்கி அட்டை முறைமை மீது நடந்த தாக்குதல்களுக்கு பொறுப்பான சர்வதேச வலையமைப்பின் அங்கத்தவர்களாக இருந்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் மோசடிக் கும்பலின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துக் கொண்டு புலனாய்வாளர்கள் பல மாதங்களாக நடத்திய விசாரணைகளை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நியூசௌத் வேல்ஸ் மாநில மோசடிக் குழுவின் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பண கொடுக்கல், வாங்கல் செய்ய இயந்திரங்களை மக்கள் பயன்படுத்தும்போது கடன் அல்லது முற்கொடுப்பனவு அட்டைகளின் காந்தக் கீலத்திலிருந்து கணக்கின் விவரங்களை களவாக பிரதி செய்யும் அதிமுன்னேறிய தொழில்நுட்பத்தை இந்த மோசடிக்கும்பல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

வங்கிக் கொடுப்பனவுகளை செய்யும் இயந்திரங்கள், மடிக் கணினிகள், பணம், போலி பயண ஆவணங்கள் மற்றும் கனேடிய கடன் அட்டைகள் என்பவற்றை இவர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இந்த மோசடிக் கும்பல் மீது மோசடி, கொள்ளை, குற்றவியல் குழுவில் பங்கு மற்றும் போலி ஆவணங்களை உருவாக்க உபகரணங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com