நாவாந்துறையில் கைது செய்யப்பட்ட 95 பேரும் பிணையில் விடுதலை.
யாழ். நாவாந்துறை பிரதேசத்தில் கீறீஸ் பூதம் ஏற்படுத்திய கலகத்தினால் அங்கு ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட 95 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட நீதிமன்றில் சந்தேகநபர்கள் சற்று முன்னர் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை ஐயாயிரம் ரூபா தனிநபர் பிணையிலும் ஐயாயிரம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவர்கள் மீதான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ம் திகதிக்கு யாழ். மாவட்ட நீதவான் பிரேம் சங்கரர் ஒத்தி வைத்துள்ளார்,
0 comments :
Post a Comment