பதவி நீக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் சிலர் ஜனாதிபதியை சந்தித்தனர்.
1999முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அசாதாரணமான முறையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் 14 நீதிபதிகள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர். இந்தக் காலப்பகுதியில் 40 நீதிபதிகள் அசாதாரணமான முறையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரண செய்து தமக்கு நீதியை பெற்றுத்தருமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் உடன் இருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment