Saturday, August 20, 2011

இலங்கை ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகொப்டர்கள் கொள்வனவு

இலங்கை ரஷ்யாவிடமிருந்து மிக் 171 ரகத்தை சேர்ந்த இராணுவ பயன்பாட்டிற்குரிய 14 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்துள்ளதாக ரொய்டர் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் ஆயுத ஏற்றுமதி நிறுவன பணிப்பாளர் எனடொலி இசாய்கின் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக ரஷ்யாவின் அரசாங்க செய்திச் சேவையான இட்டா-டாஸ் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை கொள்வனவு செய்யப் போவதாக வெளியான தகவலை அடுத்தே இந்த ஹெலிகொப்டர் கொள்வனவு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

விமானப்படை பேச்சாளர் அன்று விஜேசூரிய இலங்கை விமானப்படை, பொதுமக்கள் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.`

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com