மத்துகம வெலிபென்ன வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி
மத்துகம வெலிபென்ன வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று பவுசருடன் மோதியமையால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் குறிப்பிட்டனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் களுத்துறை நாகொடை வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் இத்தாபான பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பௌசரின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் வெலிபன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment