இலங்கை பிரஜைகள் இருவர் இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் கைது
இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலிக் கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி டுபாய்க்கு செல்ல முயற்சித்த போதே இவர்கள்கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு இலங்கையர்களும் டுபாய் வழியாக சுவிட்ஸர்லாந்துக்கு செல்லவிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் இருந்தே குறித்த இலங்கையர்கள் கொல்கத்தாவுக்கு சென்றுள்ளனர்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி மேலும் இரண்டு இலங்கையர்கள் போலிக் கடவுச் சீட்டுக்களுடன் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
...............................
0 comments :
Post a Comment