காவத்தை பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு விஷேட இராணுவக் குழுக்கள்- இராணுவப் பேச்சாளர்
வயோதிப பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் சில இடம்பெற்றதை தொடர்ந்து காவத்தை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு கோரி மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.இதனையடுத்துகாவத்தை பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக் இரண்டு விஷேட இராணுவக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல குறிப்பிட்டார்.இந்த இராணுவக் குழுக்கள் அங்குள்ள விஹாரைகளில் தங்கியுள்ளதாக குறிப்பிட்டார்
எவ்வாறாயினும் இந்தக் குழுக்கள் காவத்தை பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இதுவரை தொடர்புபடவில்லை எனவும் இந்த பிரதேசத்தின் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
0 comments :
Post a Comment