தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர் வரும் 12 ஆம் திகதி -தேர்தல்கள் செயலகம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர் வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சுமார் அறுபதாயிரத்துக்கும்மேற்பட்ட அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பீ சுமனசிறி கூறினார். இம் முறை தபால்மூல வாக்களிப்புக்காக ஒரேயொரு தினத்தை மாத்திரமே ஒதுக்கியுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார் இதேவேளை புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். 65 உள்ளூராட்சி மன்றங்களுகான தேர்தல் எதிர் வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment