அரசியல் செல்வாக்குடனே போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுகின்றது- ஜோன் அமரதுங்க
போதைப்பொருள் வியாபாரத்தின் பின்புலத்தின் அரசியல்வாதிகள் செயற்படுவதாக எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படும்போது, சில பொலிஸ் நிலையங்களுக்கு அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள் செய்தியாக வெளியிடுகின்ற ஊடகவியலாளர்களிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஜோன் அமரதுங்க கூறினார். இதற்கு பதிலளித்த பிரதமர் டீ.எம் ஜயரத்ன ஜோன் அமரதுங்கவினால் கூறப்பட்ட விடயங்கள் உண்மையானவை எனக் குறிப்பிட்டார். போதைப்பொருளை ஒழிப்பதற்கான மக்களின் ஒத்திழைப்பு குறைவாக உள்ளதென பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment