Saturday, June 18, 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அமெரிக்காவில் உள்ள மாநில நீதிமன்றமொன்று அழைப்பாணை விடுத்துள்ளது. சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான அமெரிக்க பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் ஜனாதிபதியிடம் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெக் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதற்கு அமைய ஜனாதிபதிக்கான நீதிமன்ற அழைப்பாணை இலங்கை நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத கொலைகளால் மூன்று மாணவர்கள் பலியானதாக அவர்களுடைய பெற்றோர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

அத்துடன் இறுதி யுத்தத்தில் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த தங்களது உறவினர்கள் எரிகணைத் தாக்குதலில் பலியானதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. குறித்த மனுவின் பிரதிவாதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com