பின்லேடன் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளும் தள்ளுபடி
அல் கொய்தா இயக்க தலைவரான பின்லேடன் அமெரிக்க நேவி சீல் படையினரால் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து அவர் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளையும் மான்ஹட்டன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி லூயிஸ் கப்லன் தள்ளுபடி செய்துள்ளார். மேலும் சுட்டு கொல்லப்பட்டது பின்லேடன் தான் என்பதற்கு ஆதாரமாக அவரது மரபணு பற்றிய சோதனை, முக அடையாளம் பற்றிய சோதனை, அவரின் மனைவிகளில் ஒருவரது நேரடி சாட்சி, அவர் வசித்த வீட்டில் கிடைத்த பின்லேடன் பற்றிய வீடியோ மற்றும் அல் கொய்தா பற்றிய விவரங்கள் அடங்கிய மற்ற ஆவணங்கள் ஆகியவை அடிப்படையாக கொள்ளப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் 13 வருடங்களுக்கு பின் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment