நிபுணர்குழு அறிக்கை – ஐ.நாவின் அடுத்தக்கட்டம்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம் அடுத்துக்கட்ட செயற்பாடுகளை மேற்கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசிர்கீ இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த அறிக்கை தொடர்பிலான அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு, இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளே நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் காணொளி தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த காணொளியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய பேச்சாளர், பான் கீ மூன் இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்திருந்த போதும், அவை அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment