கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது.
பல கோரிக் கைகளை முன்வைத்து சிறைக் கைதிகள் ஆரம்பித்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் சில சிறைச் சாலைகளில் தொடர்ந்தும் முன்னேடுக்கப் படுகின்றன. வெலிக்கடைச் சிறைச் சாலையின் கூரை மீதேறி போராட்டம் நடத்திய 20 சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை இடை நிறுத்தியிருப்பதாக சிறைச் சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், போகம்பறை சிறைச்சாலையின் 33 கைதிகளும், மஹர சிறைச்சாலையின் 14 கைதிகளும் தமது உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, கைதிகளின் மனோநலத்தை மேம்படுத்தும் வகையில் சிறைச்சாலையினுள்ளேயே அறநெறிப்பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment