Sunday, May 22, 2011

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு!

ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு மொத்தம் 47 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவி காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஆசிய நாடுகளுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால், இந்தியாவுக்கு போட்டி இல்லாத நிலை உண்டானது. மொத்தம் 189 நாடுகளால் வாக்களித்ததில், இந்தோனேஷியாவுக்கு 184, பிலிப்பைன்ஸுக்கு 183, இந்தியாவுக்கு 181 மற்றும் குவைத்துக்கு 166 வாக்குகள் கிடைத்தன.

பர்கினா ஃபாஸோ, போட்ஸ்வானா, காங்கோ, பெனின், செக் குடியரசு, ருமேனியா, சிலி, கோஸ்டா ரிகா, பெரு, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகியவை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பு நாடுகளாகும்.

இந்த நாடுகள் வரும் ஜூன் 19-ல் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அங்கம் வகிக்கும்.

தற்போது நடந்து வரும் போராட்டங்களால், சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள சிரியா தனது வாய்ப்பை குவைத்துக்கு அளித்தது.

சிரியா பிரச்னையில் கலப்பு நிலைப்பாடு கொண்ட கருத்துகளை வெளிப்படுத்திய இந்தியாவின் 'தகுதி' கேள்விக்குரியதாகவே படுகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் விமர்சித்துள்ளது.

அதேவேளையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பெறுவதற்காக முழு தகுதி கொண்டிருப்பதாக இந்தியா வாதிட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com