அறிக்கைக்கு சாட்சியங்களுடன் பதிலளிக்குமாறு ஐநா அழுத்தம்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டுமொருமுறை இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இலங்கையால் தமக்கு அளிக்கப்படும் பதில் சாட்சியங்களுடன் காணப்பட வேண்டுமென ஐநா செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இதுவரை 5 லட்சம் கையெழுத்துக்கள் பெற்றப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காலி நகரில் பொது மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment