Tuesday, May 3, 2011

உழைக்கும் மக்களுக்கு நலன் வழங்க வேண்டும் என்கிறார் ரணில்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்து உழைக்கும் மக்களுக்கு நலன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் காரணமாகவே சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொணடு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்த முடிவின் பின்னர் மக்களுக்கு நன்மைகள் வழங்குவதாக அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நன்மையும் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மைக்கு முரணான வகையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த அரசாங்கத்தை மக்களின் நண்பனாக கருதுவதனை விடவும் மக்களின் எதிரியாகவே நோக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் தொண்டமானின் ஒப்பந்தம் கரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் இன்னமும் 405 ஷரூபாவாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் மட்டுமே சம்பள உயர்விற்காக குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com