15 வயது மகளை கற்பழித்த காமத் தந்தை கைது.
பொதுவாக தந்தை தனது மகள் அல்லது மகனை தோளில் தூக்கும்போது பிள்ளைகளுக்கு இந்த உலகத்தையே அவர் காட்டுவதாக முதியோர்கள் சொல்லிவைத்துள்ளனர். ஆனால் இன்று சில பெற்றோர்கள் புரியும் காமக் கொடூர செயற்பாடுகளால் முதியோர் சொல்லுக்கும் பெற்றோர் வர்க்கத்திற்கும் இழுக்கு ஏற்படுகிறது.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் தனது 15 வயதுடைய சொந்த மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கொடூர தந்தை குறித்து கொச்சிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீமன் மாவத்தை, எத்காலி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து சுமார் 2 வருடங்கள் குறித்த சிறுமி தனது தந்தையால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன். அவரை இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment