Tuesday, May 3, 2011

சிறைச்சாலைகள் ஆணையாளர் மன்றில் ஆஜராகி தகுந்த காரணம் காட்ட பணிப்பு.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. குறித்த மனு விவாதத்தின் போது பிரதான சந்தேக நபரான சரத் பொன்சேகாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபோதும் அவரை சரியான நேரத்திற்கு நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து நீதிமன்றிற்கு விளக்கமளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு இன்று முன்னறிவித்தல் கடிதம் விடுத்துள்ளது.

எனினும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சரத் பொன்சேகா நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை, இதனை அடுத்து நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விளக்கமளிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு ரஞ்சித் டீ சில்வா, ஏ.டபள்யூ.ஏ.சலாம் ஆகிய நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com