ஐ.நா குழுவின் அறிக்கையின் ஒரு தொகுதியினை நாம் ஏற்றுக்கொள்கிறோம். UNP
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கான பரிந்துரைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை இலங்கையின் அரசியல்வாதிகள் சிலர் அடிப்படையை ஆராயாமல் நிராகரிப்பதாகவும், அனால் அவ்வறிக்கையில் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு பிரவினர் மேற்கொண்டதாக கூறப்படும் யுத்தக் குற்றத்தை தாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா வின் இவ்வறிக்கையினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவிக்கும் அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள கருத்தையும் நிராகரிக்கின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment