அர்ஜூனாவின் வாயை அடைப்பதற்கு பதவியை வழங்க திரைமறைவில் பேச்சு.
உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதியாட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள கிறிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநா யக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜூனா ரணதுங்க கடந்த காலங்களில் இலங்கை அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துவந்தார். இந்நிலை யில் அவரின் வாயினை அடைப்பதற்காக ஜனாதிபதி அவருக்கு கிறிக்கட் சபையின் தலைவர் பதவியினை வழங்க ரகசிய தூதுகளை அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
தற்போதைக்கு இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவுடன் தொடர்பு கொண்டு ஜனாதிபதியின் விருப்பத்தை தெரிவித்து உத்தியோகப் பற்றற்ற ரீதியில் கலந்துரையாடியுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலையீடுகள் இருக்காது என்ற உத்தரவாதம் தந்தால் மட்டுமே அந்தப் பதவியை தான் ஏற்றுக் கொள்வதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments :
Post a Comment