புலிகள் முற்றாக அழித்தொழிக்கப்படவேண்டும் என்பதற்காக இந்தியா மௌனம் காத்தது.
வன்னியில் மக்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டபோதும் அழிவுகள் யாவற்றையும் இந்தியா நன்கு உணர்ந்திருந்தும் புலிகளியக்கும் முற்றாக அழித்தொழிக்கப்படவேண்டும் என்ற காரணத்திற்காக இந்திய அரசாங்கம் மௌனம் காத்தது என ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்களவேவைக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், மிகவும் பலம் பொருந்திய இந்திய உளவுத்துறை புலிகளுக்குள் ஊடுருவி இருந்தது. வுன்னியில் இடம்பெற்ற சகல அழிவுகளையும் அவர்கள் அறிந்திருந்தார்கள் ஆனால் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசாங்கமும் இருந்ததால் பொதுமக்கள் உயிரிழப்புகளை அது கண்டு கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர்ப்பிரதேசத்தில் பொதுமக்கள் இருந்த வலயத்துக்குள்ளிருந்தும் இந்தியாவுக்கு பலமான புலனாய்வு வசதிகள் இருந்துள்ளன என்பதும் கோர்டன் வைஸின் கருத்து. இலங்கை இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக கண்டறிந்துள்ள ஐநா தலைமைச் செயலரின் ஆலோசனைக்கான நிபுணர குழு அந்தக் குற்றச்சாட்டுக்களை புலிகள் மற்றும் அரச தரப்பு ஆகிய இருதரப்பினர் மீதும் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஐக்கிய நாடுகள் சபை தடுத்திருக்க முடியும் என இலங்கைப்போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் கொழும்பிலுள்ள ஐ.நா தலைமையகத்தின் பேச்சாளராகவிருந்து கோர்டன் வைஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அராங்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக அழுத்தங்களை பிரயோகித்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டிருந்ததாகவும் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இறுதிக் கட்டப்போரை நிறுத்தும் நிலைப்பாட்டில் அந்த சபை இருக்கவில்லை எனவும் கோர்ட்டன் வைஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் தாம் இணங்குவதாகவும் அவர் பீ.பீ.சிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
வன்னி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அப்பிரதேசம் அவர்களின் இரும்புப் பிடியில் இருந்தது. அங்கு நுழைகின்ற ஒவ்வொரு பொதுமகனதும் அசைவுகள் புலிகளால் அவதானிக்கப்பட்டதுடன் தகவல் சேகரிப்பு என்ற விடயத்திற்கு எவ்வித வசதிகளும் இருந்திருக்கவில்லை. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் எனக் கருதப்பட்ட புலிகளியக்க முக்கியஸ்தர்கள் பலர் உட்பட பொதுமக்கள் பலரும் புலிகளின் மரண தண்டனைக்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் புலிகள் அமைப்பு புலநாய்வு நடவடிக்கையில் தமக்கு நிகர் யாரும் இல்லை எனவும் தமிழர் மத்தியில் மார்தட்டிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வன்னியினுள் இந்தியாவின் பலம்பொருந்திய புலனாய்வுத் அமைப்பு ஒன்று வன்னியினுள் இருந்ததாக கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் ஆழமாக சிந்திக்க வைத்துள்ளதுடன், புலிகளினுள் பல புலனாய்வுத் துறைகளின் ஏஜண்டுகள் தசாப்தங்களாக செயற்பட்டிந்துள்ளார்கள் என்பதை உணர்த்துகின்றது.
இதனடிப்படையில் புலிகளுக்கான மறைமுக செயற்பாட்டாளர்களாக புலம்பெயர் தேசங்களில் செயற்பட்டுவந்தோர் ஏதொ ஒருநாள் தேவையேற்படும்போது இலக்கு வகை;கப்படுவர் என்பது நிச்சயம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1 comments :
எது எப்படியோ! புலிகள் என்ற கொடியவர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
Post a Comment