ஐ.நா அறிக்கையை முறியடிக்கு சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவேண்டும். சஜித்
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை முறியடிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மோசமான வெளிவிவகாரக் கொள்கையினால் இவ்வாறான தேவையற்ற வெளிநாட்டு அழுத்தங்கள் நாட்டின் மீது பிரயோகிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் முழு நாடுமே பாதகமான நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் சந்தேகமில்லை என்ற போதிலும் இன,மத மொழி பேதங்களின்றி நாட்டின் சகல மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சி நியமனங்களின் போது மறுசீரமைப்பிற்காக குரல் கொடுத்தவர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி மறுசீரமைப்பிற்காக குரல் கொடுத்தவர்கள் பழிவாங்கப்பட்டால் அது ஓர் துரதிஸ்டவசமான நிலைமையாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment