Tuesday, April 5, 2011

லண்டனில் புலிகளின் இருகுழுக்களிடையே மோதல் லண்டன் பொறுப்பாளர் படுகாயம்.

புலிகளின் அனைத்துலகச் செயலகம் மற்றும் தலைமைச் செயலகம் எனும் இருகுழுக்களிடையே இருந்துவந்த பனிப்போர் வாள்ப்போராக மாறி தலைமைச் செயலகத்தை சேர்ந்த தனம் எனப்படும் நபர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மே 18 திகதிக்கு வரை புலிகளியக்கத்துக்கான லண்டன் பொறுப்hளராக செயற்பட்டுவந்தவர் தனம். இவர் லண்டனில் வசித்து வருகின்றார். இவரை இன்று காலை அவரது இல்லத்திற்கருகில் சுற்றிவளைத்த தலைமைச் செயலகம் சார்பான புலிகளின் வன்முறைக்கும்பல் ஒன்று கண்மூடித்த னமாக தாக்கியதில் அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 10 ற்கு மேற்பட்ட இளைகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

புலிகளின் அனைத்துலகச் செயலகம் எனப்படும் குழுவில் முக்கியஸ்தரான இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நெடியவன் குழுவினரே பொறுப்பு என இவர் சார்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளின் சொத்துக்களை பிரிப்பதிலும் தொடர்ந்தும் தமிழ் மக்களிடம் தமது வன்செயல் கலாச்சாரத்தை நிலைநிறுத்வதிலும் இவர்களிடையேயுள்ள போட்டியே இத்தாக்குதலுக்கான காரணம் என தெரியவருகின்றது.

தாக்கப்பட்டுள்ள தனம் மனிதநேயச் செயற்பாட்டாளர் எனவும் இவர் லண்டனில் தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள புலிகளின் இணையம் ஒன்று இத்தாக்குதலின் பின்னணி மற்றும் யா ரால் மேற்கொள்ளப்பட்டது என்பதை குறிப்பிட மறுத்துள்ளது.

புலிகளின் சொத்துப்பிரிப்புக்களின் பின்னால் எதிர்வரும் காலங்களில் நிகழப்போகும் அவலங்கள் இவற்றிலும் பாரதூரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது

1 comments :

Anonymous ,  April 6, 2011 at 4:29 PM  

அன்றிலிருந்து வெளிநாடுகளில்
சொகுசாக வாழ்ந்து கொண்டு, புலிகளை பப்பாவில் ஏற்றிவிட்டு படுகுழிக்குள் தள்ளிவிட்ட கோஷ்டிகள் இன்று புலிகளின் பெயரில் சேர்த்த ஊரவன் பணம், சொத்துக்களுக்கு போராட்டம் நடத்துகிறது. அதேநேரம் தனது குடும்பம், சொத்து, சுகம் பாராது தனது உயிரை பணயம் வைத்து தாயக மண்ணுக்காக போராடிவர்களும் அவர்களின் குடும்பங்களும் அநாதரவாக நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவற்றையெல்லாம் கண்டும் காணாமல், பாராமுகமாக ஒதுங்கி வாழநினைக்கும் சுயநலத் புலம்பெயர் தமிழினம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com