Saturday, April 16, 2011

மகனை வைத்து பின்லேடனை பிடிக்க புஷ் தீட்டிய திட்டம் அம்பலம்.

தனது தந்தை ஒசாமா பின்லேடனை பிடிக்க மாஜி அமெரிக்க அதிபர் புஷ் போட்ட மாஸ்டர் பிளான் குறித்து அவரது மகன் ஒமர் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான இரட்டை கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தகர்த்தப்பட்டது.இதற்கு அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது.

பின்லேடனை பிடிக்க அப்போதைய அதிபராக இருந்த ஜியார்ஜ் புஷ் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது முயற்சிக்கு பலன்கிடைக்கவில்லை.இந்நிலையில் அமெரிக்க மாஜி அதிபரான புஷ் தனது பதவி காலத்தின் கடைசி நாளில் , பின்லேடனை பிடிக்கும் முயற்சியாக , அவரது மகன் ஒமரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஸ்‌பானீஸ் தினசரி பத்திரிகையான லா-வாங்கூராடிய எனும் பத்திரிகைக்கு பின்லேடனின் நான்காவது மகன் ஒமர் (29) அளித்துள்ள பேட்டியில், கடந்த 2009-ம் ஆண்டு கத்தார் தலைநகர் டோக்கோ வந்திருந்த அமெரிக்க மாஜி அதிபர் புஷ், என்னை வெள்ள‌ை மாளிகைக்கு அழைத்து, பின்லேடனை பிடித்து தர உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்காக எந்த நிபந்தனையும் தாம் விதிக்கமாட்டோன் என்றார். புஷ்ஷின் இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை. பின்லேடன் ஒரு பயங்கரவாதி தான் , அவரது கொள்கை எனக்கு பிடிக்கவில்லை. இன்று வரை நான் அவரிடம் எந்த தொடர்பு வைத்துக்கொண்டதி‌ல்லை. எப்படியாயினும் அவர் என்னுடைய தந்தை . ஆகவே எனது தந்தையை பிடிக்க உதவமாட்டேன் என்று கூறினார். இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வெள்ள‌ை மாளிகை நிர்வாகம் ஒமர் இந்த அறிக்கைக்கு கருத்து கூற மறுத்துவிட்டது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com