ஊழலை ஒழிக்க இன்டர்போல் அக்கறை
சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்க உலக வங்கியும், சர்வதேச போலீஸ் அமைப்பும்(இன்டர்போல்) தீர்மானம் இயற்றியுள்ளன.வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோலிக், இன்டர்போல் தலைவர் பூன் ஹூய் கூ, சர்வதேச கிரிமினல் கோர்ட் வக்கீல் லூயிஸ் மொரினோ, பிரிட்டன் குற்றத்தடுப்பு இயக்குனர் ரிச்சர்டு அல்டர்மேன், ஐரோப்பிய குற்றத்தடுப்பு டைரக்டர் ஜெனரல் ஜியோவானி கெஸ்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் ஊழலை ஒழிக்க, இந்த கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. "ஏழைகளின் பணத்தைச் சுரண்டும் ஊழல், சட்டப்படி குற்றத்துக்குரியது' என தெரிவித்த உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோலிக், "வளரும் நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் பல்வேறு வகையான ஊழல்களை இந்த தீர்மானம் தடுக்க வழி செய்யும்' என்றார்.சர்வதேச ஒத்துழைப்பும், தொழில்நுட்ப ஒத்துழைப்பும் தேவை என இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இன்டர்போல், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய குற்றத்தடுப்பு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள், ஊழலைத் தடுக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.
0 comments :
Post a Comment