மாதகல் கடற்பரப்பில் உருக்குழைந்த ஆணின் சடலம்
யாழ். மாதகல் கடற்கரையோரப் பகுதியில் உருக்குழைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளாதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதகல் மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் உருக்குழைந்த நிலையில் காணப்படுவதினால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் இது இந்திய மீனவருடைய சடலமாக இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் எந்தவித ஆடைகளும் அற்ற நிலையில் கரை ஓதுங்கியுள்ளதாகவும் உடலின் பல பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதாகவும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பாக இறந்திருக்க வேண்டும் எனவும் இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment