எதிரி இணையத்திற்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்கிறார் சாந்திரமேஸ்வவுனியன்.
புலிகளின் ஊதுகுழல்களில் ஒன்றான எதிரி இணையம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கான செயற்பாடுகளில் சாந்திரமேஸ்வவுனியன் இறங்கியுள்ளதாக இலங்கைநெற் அறிகின்றது. தமிழ் தேசியம் என்றபெயரால் புலிப்பாசிசத்தை ஆதரித்து புலம்பெயர்தேசமெங்கும் பிரச்சாரப் பீரங்கிகளாக செயற்பட்டுவந்தோரிடையே நான்பெரிதா நீபெரிதா என்றபோர் நிகழ்ந்துவருவது யாவரும் அறிந்ததே.
சாந்திரமேஸ்வவுனியன் ஒருகாலத்தில் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்துவந்ததுடன், புலிகளின் செயற்பாடுகள் யாவும் மனிதகுலத்திற்கு எதிரானது என்பதை தற்போது உணர்ந்துள்ளதாக கூறுவதுடன் புலிகளின் கடந்தகால தவறுகளை வெளிப்படையாக விமர்சித்தும் வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த பெண்போராளி எனக் கூறப்படும் ஆர்த்தனா என்பவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. அவ்வறிக்கையில் புலம்பெயர் புலிகள் தமது சுயலாபங்களுக்காக புலிகளின தலைமையினை காட்டிக்கொடுத்துள்ளதாகவும், மக்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் கோரப்பட்டிருந்த இவ்வறிக்கை புலம்பெயர்ந்து வாழும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டிருந்தது.
இம்மின்னஞ்சலில் புலி ஆதரவாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் இணையத்தளங்கள் வியாபார நோக்கிற்காகவே தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதுடன் அவை பொறுப்புணர்ச்சி அற்றமுறையிலும் செயற்படுகின்றது என சுட்டிக்காட்டியிருந்தது.
இவ்வறிக்கை ஊடாக தமது முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்த எதிரி இணையத்தளம் , இவ்வறிக்கை உண்மையில் புலிப்போராளி ஒருவரால் விடுக்கப்பட்டது அல்லவெனவும், சாந்திரமேஸ்வவுனியன் புலிப்போராளியின் பெயரில் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் பரப்புரைகளை இணையத்தளங்கள் , மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக செய்துள்ளார்.
இவரது பரப்புரைகள் ஊடகதர்மத்தை மீறியதாகவும், தனிமனிதன்மீது மேற்கொள்ளப்படும் சேறடிப்பாகவும் நோக்கும் சாந்திரமேஸ்வவுனியன் ஜேர்மன் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளதுடன், மானநஷ்ட வழக்கிற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக அறிய முடிகின்றது
0 comments :
Post a Comment