புலிகளின் தவறுக்கு தமிழர் பொறுப்பல்ல : லண்டனில் சோனியாவுக்கு தமிழர் வரவேற்பு.
பிரித்தரினயாவிலுள்ள இலங்கைத் தமிழர்கள் சிலரைக் கொண்ட ACTNOW எனும் அமைப்பு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியக் காங்கிரஸ் சார்பாக பேசவந்திருந்த புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட பாரத முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தி இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக கருணைகாட்டவேண்டும் என கவனயீர்ப்பு ஆhப்பாட்டம் போராட்டம் ஒன்றை நாடாத்தியுள்ளனர்.
ஆர்பாட்ட ஏற்பாட்டுக்குழுவினைச் சேர்ந்த ஒருவரிடம் புலிகளினால் கொலைசெய்யப்பட்ட ஒருவரின் மனைவியிடம் இலங்கை மக்கள் எவ்வாறு கருணையை எதிர்பார்க்க முடியும் எனவினவியபோது, புலிகள் செய்த தவறுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது எனவும் , இலங்கைத் தமிழரை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டவர்கள் புலிகளே எனவும், அதனடிப்படையில் சோனியாகாந்தியும் , இலங்கைத் தமிழரும் புலிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் உதவி கோருவதில் என்ன தவறு உண்டெனவும் வினவினார்.
அதற்கு உதாரணமாக தாம் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை காண்பித்த அவர் அதில் 'இலங்கை அரசினால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ள மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்கு இந்திய அரசு உதவியது' எனும் வார்த்தை பிரயோகத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டால் யாவற்றுக்குமான விடை கிடைக்குமெனவும் தெரிவித்தார்:.
அதேநேரம் பொதுநலவாயநாடுகளின் கருத்தரங்கில் கலந்து கொண்ட சிலர், இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியதாகவும் அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது என சோனியா பதிலளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பெண்களின் உரிமைகள் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளமை பாராட்டத்தக்கவிடயமே. ஆனால் இவர்கள் பிரபாகரன் கும்பலிடம் ரஜீவ்காந்தியை கொலைசெய்வதற்கும் வேறு பல தற்கொலைத் தாக்குதல்களுக்கும் பலிகொடுத்த பெண்கள் தொடர்பாக இதுவரை கேள்வி எழுப்பாமைக்கான காரணங்கள் யாது? அப்பெண்கள் தொர்பான இவர்கள் கணிப்பீடு யாது?
0 comments :
Post a Comment