பொதுமக்களை தாக்கினால் லிபியா மீது ராணுவ நடவடிக்கை: ஒபாமா எச்சரிக்கை.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் பல நகரங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றை மீட்கவும், போராட்டத்தை ஒடுக்கவும் கடாபி ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். ராணுவ தாக்குதலால் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களை தாக்கினால் லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா லிபியா அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment