ஜப்பானில் அணுஉலை கூடங்களில் மின்சப்ளையை ஏற்படுத்தும் முயற்சியில் வெற்றி!
ஜப்பானில் கடந்த 11-ந் தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கின. புகுஷிமா என்ற இடத்தில் 6 அணுஉலைகள் செயல்பட்டு வந்தன. அங்கு 4 அணுஉலைகள் சூடாகி அவை வெடித்தன. இதனால் அணுகதிர் வீச்சு வெளியாகி வருகின்றன. அணுஉலைகள் சூடாகாமல் தடுக்க வேண்டுமானால் குளிரூட்டும் தொட்டிகளில் தண்ணீர் வேண்டும். அதற்கு தண்ணீர் வேண்டுமானால் மின்சாரம் வேண்டும். உலைகள் சேதம் அடைந்தபோது மின்சார சப்ளையும் துண்டிக்கப்பட்டு விட்டது. அணுஉலைகளுக்கு மின் சப்ளையை ஏற்படுத்தும் முயற்சியில் பொறியியல் வல்லுநர்கள் ஈடுபட்டனர். அவர்கள் முயற்சியில் கொஞ்சம், கொஞ்சமாக வெற்றி பெற்று வருகிறார்கள். 2-ம் எண் உலைக்கு 24 மணி நேரத்துக்குள் மின் சப்ளை கிடைத்து விடும் என்று பொறியியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். அணுஉலை இருக்கும் வளாகத்துக்கு வெளியே மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது.
0 comments :
Post a Comment