முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று 1ம் திகதி தமது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமார் கூறினார். படையினரிடம் சரணடைந்த இவர்களுக்கு வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற்பயிற்சி மற்றும் மனவள பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கும் வைபவம் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சுந்திரசிரி கஜதீரவின் தலைமையில் வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெறும். இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் வவுனியா அரச அதிபர் ஆகியோர் கலந்துகொள்வர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதாகி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 6 ஆயிரம் பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
1 comments :
WOW!
great.
Post a Comment