கோத்தபாய நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளார். அனுர
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றார் என்று ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவர் அவசர கால சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் அங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
'கோட்டாபய ராஜபக்ஸ அரசியல் நியமனம் பெற்று இருக்கின்றார். இவர் பாதுகாப்பு செயலாளர் என்கிற உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டமை நாட்டின் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல். இவர் அளவு கடந்த அதிகாரங்களை பயன்படுத்தி எதிர்க் கட்சியினரை அடக்குகின்றார், ஆளும் கட்சியின் நன்மைக்காக செயல்படுகின்றார்.
அவசர கால சட்டத்தின் கீழ் எந்தச் சொத்துக்களையும் கைப்பற்றி வைத்திருக்க, எவரையும் நினைத்தபடி கைது செய்து தடுத்து வைக்க இவருக்கு அதிகாரம் உண்டு.
இந்நிலை நாட்டு மக்களின் ஜனநாயகம், அரசியல் சுதந்திரம் ஆகியவற்றுக்கு பேராபத்தானது ஆகும்.
யுத்தம் முடிந்து இரு வருடம் ஆகி விட்டது. பின்னரும் ஏன் இக்காட்டுச் சட்டத்தை அரசு தொடர்ந்து வைத்து இருக்க வேண்டும்? '
0 comments :
Post a Comment