Wednesday, February 23, 2011

வடக்கில் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாப்பது அவசியமாம்.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள மன்றங்கள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானங்களை எடுக்கும் வரை அந்த மன்றங்கள் தொடர்பில் எவ்விதமான பிரசாரங்களையும் முன்னெடுக்கவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, வடக்கில் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாப்பது அவசியமானது என எடுத்துரைத்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சட்டவிரோதமான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் வேட்பாளர்கள் தங்களுடைய உருவப்படம் தாங்கிய சுவரொட்டிகளை மட்டுமே ஒட்டமுடியும். கட்அவுட்டுகளை வைப்பதோ, பதாதைகளை கட்டுவதோ முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் கட்சி செயலாளர்களுடன் நேற்றுமாலை நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்ததாக கட்சிகளின் சார்பில் பங்கேற்ற கட்சிகளின் செயலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அதன் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவினரும் , ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பியான செல்வம் அடைக்கலநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோர் தலைமையிலான கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரே கலந்துகொண்டனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com