விமான விபத்தில் 6 பேர் பலி - வெனிசுலாவில் சம்பவம்.
எல் விஜியா விமானப்படை தளத்திலிருந்து 6 பேருடன், சான்டோ டோமிங்கோ வழியாக, மெரிடா நோக்கி சென்றுகொண்டிருந்த செஸ்னா 340 ஏ ரக சிறிய விமானம், தசிரா மாநிலத்தின் சான் பெட்ரோ டெல் ரியோ பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 6 பேரும் பலியாயினர். அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment