Tuesday, December 28, 2010

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் புட்டோ படுகொலை: இரு போலிஸ் அதிகாரிகள் கைது

இஸ்லாமாபாத் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை தொடர்பில் இரு மூத்த போலிஸ் அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். சாவுத் அஜீஸ், குர்ராம் ஷெஹ்சாத் இருவரையும் பிணை யில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்து விட்டதாகச் சிறப்பு அரசாங்க வழக்கறிஞர் சௌத்ரி சுல்ஃபிக்கர் அலி தெரிவித்தார்.

புட்டோ படுகொலை செய்யப் பட்டபோது, ராவல்பிண்டி மாவட்டத் தின் போலிஸ் தலைவராக அஜீஸ் பதவி வகித்தார். அவரது பாதுகாப்புப் பிரிவின் தலைவராக ஷெஹ்சாத் பொறுப்பு வகித்தார்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகவும், கொலை நடந்த இடத்தில் தண்ணீர் அடித்துக் கழுவி ஆதாரத்தை மூடி மறைத்த தாகவும், புட்டோவுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யத் தவறியதாக வும் இருவர் மீதும் குற்றம் சாட்டப் பட்டது.

பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டாம் என்று புட்டோவின் கணவரும் தற்போதைய பாகிஸ்தானிய அதிபருமான அசிஃப் அலி சர்தாரி தங்களுக்கு உத்தரவிட்டதாக அஜீஸŸம் ஷெஹ்சாத்தும் கூறுகின்றனர். அந்த உத்தரவின் ஒலிப்பதிவு புதன்கிழமையன்று நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டது.

இருவரும் போலிஸ் அதி காரிகளாக நிறைவேற்ற வேண்டிய சட்டபூர்வ கடமையிலிருந்து தவறியதாக நீதிமன்றம் கூறியது.

புட்டோ படுகொலையை விசாரித்த ஐக்கிய நாட்டு நிறுவனக் குழுவினர், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அரசாங்கம் புட்டோவுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதாகவும், கொலைக்குப் பிந்திய விசாரணைக்கு வேவுத்துறை இடையூறுகள் ஏற்படுத்தியதாகவும் கூறினர்.

புட்டோவின் உயிரைப் பறித்த தற்கொலைத் தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் குழுவினர் ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. மேலும், பாகிஸ்தானியப் போலிசார் வேண்டுமென்றே கொலையைப் பற்றி தீர விசா ரிக்கத் தவறியதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

ஆனால், புட்டோவுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப் பட்டதாக முன்னாள் அதிபர் முஷாரப்பின் அரசாங்கம் கூறியது.

எட்டாண்டு காலம் நாடு கடந்து வாழ்ந்து வந்த புட்டோ, 2007ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பாகிஸ் தானுக்குத் திரும்பினார்.

ஒரு கொலை முயற்சியில் தப்பிய புட்டோ, டிசம்பர் 27ம் தேதி ராவல்பிண்டியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, 15 வயது வெடிகுண்டு தற்கொலையாளியால் கொல்லப்பட்டார்.
“அந்தச் சிறுவன் தனித்து செயல்பட்டதாக யாரும் நம்ப வில்லை.

“புட்டோவுக்குப் பாதுகாப்பளிக்கும் முயற்சியில் அரசாங்க அதிகாரிகள் பலரும் தோல்வி யடைந்தனர். “அதோடு, தற்கொலைத் தாக்கு தல் சம்பவத்தை மட்டுமன்றி, அதற்குத் திட்டமிட்டது யார், நிதி அளித்தது யார் போன்றவற்றையும் முழு முனைப்புடன் விசாரிக்கத் தவறிவிட்டனர்” என்று ஐக்கிய நாட்டு அறிக்கை குறிப்பிட்டது.

தற்போது குற்றம் சாட்டப் பட்டிருக்கும் இரு போலிஸ் அதிகாரிகளும் ஜனவரி 7ம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com