Tuesday, December 28, 2010

இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கோத்தா - பிரதீப் பேச்சுவார்த்தை.

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பமைச்சின் செயலர் பிரதீப் குமார் தலைமையிலான உயர்மட்ட குழு இன்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான குழுவினருடன் நீண்ட பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளது.

இச்சந்திப்பின்போது இந்தியா - சிறிலங்கா இடையே இராணுவ உறவை பலப்படுத்த, இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் இராணுவத் தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற முடிவுக்கு வந்துள்ளது. இம்முடிவினை பாதுகாப்புச் செயலர் கோத்பய ராஜபக்ச, இந்திய பாதுகாப்பு அமைச்சகச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் டெல்லிக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்து ராஜபக்ச இந்திய பிரதமர் மன்மோகன் சிங் குடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு இணங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவை பலப்படுத்த பாதுகாப்பு அமைச்சக செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் தலைமையிலான குழுவில் இந்தியாவின் முப்படைகளின் மூத்த அதிகாரிகள், கடலோர காவற்படை, அயலுறவு, பாதுகாப்பு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும், இலங்கையின் முப்படைத் தளபதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் முப்படைகளின் தளபதிகளும் தங்களுக்கிடையே தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் முகமாக இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து பயிற்சி மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

'கடல் வழி பாதுகாப்பு உட்பட டெல்லிக்கும் கொழும்பிற்கும் பொதுவான பாதுகாப்பு கவலைகள் உள்ளன. இந்த பொதுவான கவலைகளே இரு தரப்பு பரிமாற்றங்களுக்கான பொதுவான அடிப்படையாக இருக்கும்' என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்திற்கு குறுகிய தூர ஏவுகணைகள், சக்தி வாய்ந்த ராடார்கள் ஆகியவற்றை அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார், பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் அலறி மா ளிகை சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்துள்ளார். இந்சந்திப்பின்போது அமைச்சர் பசில் ராஜபக்சவும் உடனிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments :

Anonymous ,  December 29, 2010 at 7:54 AM  

இந்தியாவுக்கு தலையிடியாக இலங்கை மாறிவரும் நிலையில் இந்தியா முன் எச்சரிக்கையாக நடக்க வேண்டியுள்ளது. மிகவிரைவில் இலங்கையில் பல மாற்றங்கள் நடைபெறலாம்.

Anonymous ,  January 11, 2011 at 6:54 AM  

why should lanka need short range missals after finishing the war? India is making one more mistake by giving more weapon power to lanka , by doing this one immeadiate threat pose to all southern states including tamilnadu. please consider this before decide this.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com