Tuesday, December 28, 2010

யாழில் எயிட்ஸ் பரபரப்பு! 76 பேருடன் செக்ஸ் உறவு கொண்டேன்! 17 வயது யாழ் யுவதி.

17வயதேயான யுவதி ஒருத்தி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்த தகவல் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகி இருப்பதாக நம்பப்படுகின்ற இந்த பாடசாலை மாணவியின் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அண்மையில் கொழும்பில் வைத்தியசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த படைச்சிப்பாயின் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர் எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குறித்த பாடசாலைச் சிறுமியுடன் தான் தொடர்பு கொண்டிருந்ததை அவர் ஒத்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து கொழும்பிலிருந்து வைத்திய நிபுணர்களால் உள்ளுர் வைத்திய அதிகாரிகளுக்கு அவசர அவசரமாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து குறித்த சிறுமி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வேளையிலேயே 76 பேர்களின் பெயர்ப்பட்டியலை அவர் முதல்கட்டமாக வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. 14 வயது முதல் 17 வயது வரையான 3 வருட காலப்பகுதியிலேயே இவ்வாறான பாலியல் ரீரியாக தன்னுடன் தொடர்பு கொண்டிருந்த 76 பேரினது பெயர்களை இவர் விபரித்திருப்பதாக தெரிய வருகின்றது.

இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்றன. இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்க்குடாநாட்டில் வேகமாகப் பரவி வருகின்ற வரம்பு மீறிய புரள்வுகள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் கருக் கலைப்பதற்காக வருகின்றவர்கள் 18 முதல் 20 வயதிற்கும் குறைவான வயதினை உடைய இளம் பெண்களே அதிகளவில் இருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னணிப் பாடசாலைகள் பல இலக்கு வைக்கப்பட்டு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக 20 வயதிற்கும் குறைவான பாடசாலை மாணவர்களிடையே ஆபாச பட இறுவட்டுக்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கூற்படுகின்றது.

குறிப்பாக விளையாட்டு மைதானங்களிலும் பாடசாலைகளிலும் இவை சரளமாகப் புழங்குகின்றன. இவை எவ்வாறு வந்து சேர்கின்றன என்பது தொடர்பான மர்மங்கள் தொடர்கின்றன. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இத்தகைய சம்பவங்களள் கட்டுப்பாட்டுள் இருந்த தாகவும் இப்போது மீண்டும் இந்த பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இந்தப் புரள்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக இந்த 17 வயதுடைய பாடசாலைச் சிறுமியின் தந்தை ஒரு உள்ளுர் கிராம அதிகாரி எனக் கூறப்படுகின்றது.

ஏற்கனவே சாவக்சசேரிப்பகுதியைச் சேர்ந்த இதேபோன்ற ஒரு சிறுமி பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாலியல் நோக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்ட வேளை முன்னரங்கப் பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் சாவகச்சேரி நீதிமன்றில் இடம்பெற்ற வேளை தான் பல தடவைகள் பலாலிக்கு போய் வந்துள்ளதாக அவர் திடுக்கிடும் தகவல்களை வழங்கியிருந்தார். நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் அவர் பெண் சிறார்களுக்கான விசேட தடுப்பு மையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும் தற்போது எச்ஐவி தொற்றலுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற மாணவி தொடர்பில் வைத்தியர்கள் தமது கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை ஒன்று மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு சிறுவர் நலன்களுடன் தொடர்புடைய நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதித் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவரை காவற்துறையினர் தகவல்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

2 comments :

Anonymous ,  December 29, 2010 at 7:25 AM  

கலாச்சார சீரழிவுகள் தமிழினத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல இலங்கை முழுவதையும் பாதிக்கும்.
தாய்லாந்து போல் இலங்கை நிட்சயம் விரைவில் மாற்றமடையும்.
பணம், பணம் இதுவே மாய உலகம்.

Anonymous ,  December 31, 2010 at 10:19 PM  

We like our Native place.But It is going to worst position

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com