Tuesday, December 28, 2010

வட-கிழக்கிலிருந்து 4445 மாணவர்கள் பட்டப்படிப்புகளுக்கென அனுமதிக்கப்படுவர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய பல்கலைக்கழகங்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் 2010 - 2011ம் கல்வியாண்டில் 4445 மாணவர்கள் பட்டப்படிப்புகளுக்கென அனுமதிக்கப்படுவர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதிகளுக்கான மேலதிக செயலாளர் கலாநிதி.பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 1100 பேரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 990 பேரும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 1535 பேரும், திருகோணமலை வளாகத்திற்கு 120 பேரும், சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கை நிறுவனத்திற்கு 230 பேரும், வவுனியா வளாகத்திற்கு 275 பேரும், ராமநாதன் நுண்கலைக் கல்லூரிக்கு 195 பேரும் அனுமதிக்கப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த கல்வியாண்டில் நாடளாவிய ரீதியில் உள்ள 15 தேசிய பல்கலைக்கழகத்திற்கு 22500 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். அத்தோடு இவர்களுள் கூடுதலானோர் பேராதனை பல்கலைக்கழத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதாவது 2525 பேர் பேராதனைக்கும், ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு 2380 பேரும், கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 1925 பேரும் அனுமதிக்கப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த கல்வியாண்டில் ரஜரட்ட, சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவம் என்ற புதிய பாடநெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் இக் கல்வியாண்டில் மருத்துவபீடத்திற்கு 1165 பேரும், பொறியியல் துறைக்கு 1265 பேரும், கலைப்பீடத்திற்கு 4800 பேரும், வர்தக துறைக்கு 4045 பேரும், அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com