Thursday, August 19, 2010

புதிய பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கும் கே.பி கூலிக்கு டிபிஎஸ் ஐ அமர்த்துகின்றார்.

இலங்கை அரசின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரமும் முன்னாள் போதைப்பொருட் கடத்தல் மன்னனுமான கே.பி இலங்கையில் புதிய பத்திரிகை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அப்பத்திரிகையின் பிரதம எழுத்தாளராக டிபிஎஸ் ஜெயராஜ் ஐ கூலிக்கமர்த்தவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. டிஎஸ்பி ஜெயராஜ் ஐ குறிப்பிட்ட பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஸ்ட இராணுவ அதிகாரி ஒருவர் சிபார்சு செய்துள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.

புதினம் , தமிழ்நாதம் ஆகிய இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டபோது அவை கே.பி யின் உத்தரவின்பேரிலேயே தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது எனவும் அவை மக்களை ஏமாற்றுவதற்கு புதிய வடிவில் மீண்டும் வெளிவரும் எனவும் இலங்கைநெற் தெரிவித்திருந்தமை தற்போது நிதர்சனமாகின்றது. கே.பி யினால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய இப்பத்திரிகைக்கு புதினம் , தமிழ்நாதம் , புலிகளின்குரல் போன்றவற்றிற்கு எழுதியோர் எழுதவுள்ளதாகவும் , அவர்களில் பலர் வெளிநாடுகளில் உள்ளதால் இவர்கள் கை ஒங்காமல் இருப்பதனை உறுதி செய்யவே இலங்கை அரசிற்கு மிகவும் விசுவாசமானவரான டிபிஎஸ் ஐ பிரத ஆசிரியராக நியமிக்குமாறு அரச தரப்பினரால் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளரான தயா மாஸ்ரரும் பத்திரிகையில் இணைத்துக்கொள்ளப்படலாம் என நம்பப்படுகின்றது.

இலங்கை அரசின் சகல செயற்பாடுகளையும் தடுப்புக்காவலிலுள்ள முன்னாள் புலிகளுடாகவே நியாயப்படுத்துவதென்ற நோக்குடன் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பத்திரிகையூடாக தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர் யுவதிகளின் சோகக்கதைகளை புலம்பெயர் தமிழருக்கு விற்று பணம் சம்பாதிக்கவும் கே.பி யின் புலம்பெயர் வசூல்ராஜாக்கள் தயாராகி வருகின்றனர்.

அதேநேரம் இப்பத்திரிகை இலங்கையில் முன்னாள் புலிகளினாலேயே விற்பனை செய்யப்படும் எனவும் , புலிகளின் குரல் பத்திரிகை எவ்வாறு புலிகளால் பலவந்தமாக மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டதோ அதே பாணியில் இப்பத்திரிகையும் திணிக்கப்படும் என நம்பப்படுகின்றது. இப்பத்திரிகை வெளியாகும்போது குடாநாட்டு பத்திரிகைகளின் கிராக்கி குறையும் என கே.பி தரப்பினரால் நம்பப்படுகின்றது. அத்துடன் இப்பத்திரிகை ஈபிடிபி யினரால் நிர்வகிக்கப்படும் திரமுரசு பத்திரிகைக்கும் சவாலாக அமையும்.

பிரபாகரனின் வன்முறைக்கலாச்சாரத்திற்கு நியாயம் கற்பித்த மேற்படி கூலியாட்கள் இப்பத்திரிகையூடாக தமிழ் மக்களை எவ்வாறு ஏமாற்றப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com