Friday, March 5, 2010

போலிச் சாமியார் நித்யானந்தாவுக்கு கடும் தண்டனை தரமுடியும்! - வக்கீல்கள்

'நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா
நித்யானந்தர் சொ‌த்து‌க்க‌ள் முட‌க்கமா? கர்நாடக அமைச்சர் ப‌தி‌ல்


சென்னை, பிரபல சாமியார் நித்தியானந்தா, ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோவை பிரபல தமிழ்த் தொலைக்காட்சி (மார்ச்.2) ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பக்தர்களும், இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலையில் 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் நிஜ பெயர் ராஜசேகரன். இவருக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன. நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். பெங்களூரில் மைசூர் சாலையில் இவரது தலைமையகம் உள்ளது. இவர் பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் வெப்சைட் கூறுகிறது.

இந்நிலையில், நித்தியானந்தா, ஒரு நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோவை பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நடிகையின் முகத்தை மட்டும் அந்தத் தொலைக்காட்சி மறைத்து விட்டது. மாறாக அவரது பெயர் 'ஆர்' என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் என்று மட்டும் குறிப்பிட்டது.

அந்த நடிகையும், நித்தியானந்தாவும் சின்னச் சின்ன சில்மிஷங்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைதான் இதை ரகசியமாக படமாக்கியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நடிகைதான் இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.

ஆசிரமம் சூறை

புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கல்கி ஆசிரமத்தில் மக்கள் தாக்குதல்

சித்தூர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தை பொதுமக்கள் தாக்கி சூறையாடி தீவைத்தனர். 2 பஸ்களுக்கும் தீவைக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் வரதையாபாலம் என்ற இடத்தில் இந்தஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தின் தகவல் அலுவலகமும் தாக்கி சூறையாடப்பட்டு விட்டது.

ஆசிரமத்தில் பெண்களுக்கு லேகியத்தில் போதை மருந்தை கலந்து தருவதாகவும், பண மோசடி நடப்பதாகவும் கூறி பொதுமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.

தாக்குதலில் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. 2 பஸ்களுக்குத் தீவைக்கப்பட்டது. மேலும் ஆசிரமத்திற்குள் இருப்போரையும் பொதுமக்களே மீட்டு வந்தனர்.

ஆசிரமம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் பெருமளவில் விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர். ஆசிரமத்தைக் காக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி அருகே உள்ள ஏம்பலம் கிராமத்தில் உள்ள நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் சூறையாடப்பட்டது. ஆசிரமத்துக்குள் இருந்த பொருட்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்தது. மேலும் ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த சாமியாரின் படங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதேபோல் அம்பலத்தார் மடத்து வீதியில் உள்ள சாமியாரின் யோகா மையத்திலும் சாமியாரின் படங்களுக்கு தீ வைக்கப்பட்டது. யோகா மையம் சூறையாடப்பட்டது.

கதவைத் திற காற்று வரும்

கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் நித்தியானந்தா சுவாமிகளின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை.

இவரது ஆசிரமக் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.

ஒரு சிலரின் இத்தகைய காமக் களியாட்டங்களால் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள நேர்மையான சாமியார்களின் பெயரும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டமானது.

போலிச் சாமியார் நித்யானந்தாவுக்கு கடும் தண்டனை தரமுடியும்! - வக்கீல்கள்
போலிச்சாமியார் நித்தியானந்தன் செக்ஸ் லீலைகளுக்கு தண்டனை தர முடியாவிட்டாலும், அவருக்கெதிராக பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் மோசடி, மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து பெரும் சொத்து குவித்தது, மதத்தை இழிவுபடுத்தியது என பல்வேறு மோசடிகள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கூட பெற்றுத் தர முடியும், என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

நித்யானந்தா மீது தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அவர் மீது யாரும் செக்ஸ் புகார் கூறாததால், அவர் தப்பித்துக் கொள்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆயுள்தண்டனை வரை பெற்றுத் தர முடியும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள்ரமேஷ் கூறுகையில், "இப்போது நித்யானந்தம் மீது 420, 295 பி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி, மத உணர்வுகளைப் புண்படுத்தியது போன்ற பிரிவுகள் இவை.

இவை தவிர, அவர் மீது சமூக அமைதியைக் கெடுத்ததற்காகவும் அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். குண்டர் சட்டத்தில் கூட அவரை உள்ளே தள்ளலாம் அரசு நினைத்தால். ஆனால் செய்வார்களா தெரியவில்லை..", என்றார்.

வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "சாமியாராக இருப்பவர்கள் இல்லறத்தில் ஈடுபடகூடாது என்று எந்த சட்டமும் கூறவில்லை. ஒரு மைனர் பெண்ணிடம் அவள் விரும்பியோ, விரும்பாமலோ உறவு கொண்டால் குற்றம் .

ஆனால் வயதுக்கு வந்தவர்கள் விரும்பி உறவு வைத்துக் கொண்டால் யாராலும் கேட்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை.

நித்யானந்தா விவகாரத்தில் நடிகை ரஞ்சிதாவுடனான நெருக்கம் ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட ரஞ்சிதா புகார் செய்யாத பட்சத்தில் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆனால் மோசடி, சமூக அமைதியைக் கெடுத்தது போன்ற பிரிவுகளில் தகுந்த ஆதாரங்கள் உள்ளபட்சத்தில் கடுமையான தண்டனை வாங்கித் தரமுடியும்", என்றார்.

வழக்கறிஞர் ராஜேந்திரன் கூறுகையில், "ஊடகங்களின் செய்தி மட்டுமே முழுமையான ஆதாரமாகிவிட முடியாது என்றாலும், குறிப்பிட்ட சம்பவம் உண்மையில் நடந்திருந்தால், அதற்கான ஆதாரங்களுக்கு வலு சேர்க்க ஊடக செய்திகளும் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு நிறைய முன் உதாரணங்கள் உள்ளன.

நடந்தது என்ன என்பதை முழுமையாகச் சொல்ல பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் உண்டு. அந்த வகையில் இப்போது வந்துள்ள செய்திகள் மற்றும் கையிலுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடரலாம்.

சாட்சிகள் வலுவாக அமைந்தால் நித்யானந்தம் கம்பி எண்ணுவதைத் தவிர்க்கவே முடியாது..", என்றார்

'நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா
நித்யானந்த சாமியார் ஒரு மோசடி ப் பேர்வழி. அவரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார் நடிகை தாரா.

கன்னடத்தில் முன்னணி நடிகை கம் அரசியல்வாதி இந்த தாரா. தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர்.

நித்யானந்தரின் மிகத் தீவிரமான பக்தை இந்த தாரா. நித்யானந்தமே பக்தர்களுக்கு 'நித்திய ஆனந்தம்' என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. நித்யானந்தத்துக்காக பல ரியல் எஸ்டேட் டீல்களில் இவர் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கன்னடத் திரையுலகில் நித்யானந்தன் புகழ் பரப்புவதில் முன்னணியில் இருந்தார்.

தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்.

இந்த நிலையில் நித்யானந்தன் - ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

இன்று தாராவின் பிறந்த நாள்!

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

அவர் கூறுகையில், "என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இந்த பக்தர்களை ஏமாற்ற எப்படி நித்யானந்தனுக்கு மனசு வந்தது. இனி மனித உருவில் சாமிகள் என்று சொல்லும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த ரஞ்சிதா விவகாரத்தின் முழுப் பின்னணியையும் வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த மாதிரி போலிச் சாமியார்களை ஒழிக்க வேண்டும்...!" என்றார்.

நித்யானந்தர் சொ‌த்து‌க்க‌ள் முட‌க்கமா? கர்நாடக அமைச்சர் ப‌தி‌ல்
நித்யானந்தர் ஆசிரமம் அரசு நிலத்தில் உள்ளதால் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எ‌ன்று‌ம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அ‌றி‌க்கை வ‌ந்தது‌ம் சொ‌த்து‌க்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா தெரிவித்தார்.

க‌ர்நாடகா சட்டப்பேரவை நே‌ற்று கூடியதும் நித்யானந்தர் பிரச்சனையை கிளப்பி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசினார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதில் அளித்து பே‌சிய அமைச்சர் ஆச்சார்யா, சாமியார் நித்யானந்தர் ஆசிரமம் கர்நாடகாவில் பிடுதியிலும் உள்ளது. அந்த ஆசிரமம் உள்ள இடம் அரசு நிலம். இந்த ஆஸ்ரமத்துக்கு நமது நாட்டில் பல மாநிலங்களில் இருந்தும், அய‌ல்நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

அ‌ய‌‌ல்நாடுகளிலும் அவருக்கு ஆஸ்ரமம் உள்ளது. இவரைப் பற்றி 2ஆம் தேதி இரவு தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரது ஆசிரமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு கட்டடத்துக்கு தீ வைத்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் அங்கு விரைந்து சென்று சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கட‌ந்த 3ஆ‌ம் தே‌தி அந்த ஆசிரமத்தில் இருந்த இரு குடில்கள் தீப்பிடித்து எரிந்துவிட்டன. மேலும் நித்யானந்தர் மான் தோலைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியானதை அடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த ஆசிரமத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். ஆனால் மான்தோலோ அல்லது வேறு விலங்கள் தோலோ கிடைக்கவில்லை. அந்த ஆசிரமத்தில் இருந்து 26 கிலோ சந்தன மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அதுபற்றி விசாரித்தபோது ஆசிரமத்தில் இருந்த சந்தன மரத்தை சில நாள்களுக்கு முன் திருடர்கள் வெட்டி எடுத்துச் சென்று கிளைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் அதுபற்றி காவ‌ல்துறை‌யிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தர் குறித்து தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். அவர் கர்நாடகம் வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவரது ஆசிரமத்தின் சொத்துக்கள் தொடர்பாக தகராறு இருந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கும்படி ராம்நகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சியர் அறிக்கை கிடைத்ததும் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஆசிரமம் அரசு நிலத்தில் உள்ளதால் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மேலும் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட விடியோ காட்சிகள் பிடுதி ஆசிரமத்தில் எடுக்கப்பட்டதல்ல. அவை தமிழகத்தில் உள்ள ஆசிரமத்தில் எடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ச்சா‌‌ர்யா கூ‌றினா‌ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com