Friday, March 5, 2010

நிருபமா ராவ் நாளை இலங்கை வருகை

இந்தியாவின் அயலுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இரண்டு நாள் பயணமாக நாளை இலங்கை வருகிறார். இந்தியாவின் அயலுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதாலும், இலங்கையில் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் அவர் இலங்கைக்கு வருவதாலும் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இலங்கையில் இந்தியத் தூதராகவும், தூதரகத்தின் முதலாவது செயலாளராகவும் பணியாற்றியவர் நிருபமா ராவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை அதிகாரப் பரவலாக்கல் யோசனைத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகையில், நிருபமா ராவின் தற்போதைய வருகை மிகவும் முக்கியமானதாகும்.

நிருபமா ராவின் இலங்கை வருகை வழக்கமான இரு தரப்பு பரஸ்பர நலன் அடிபடையிலான கலந்துரையாடல் தொடர்பானதே என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை இனப்பிரச்னை விவகாரத்தில் தீர்க்கமான சில கொள்கை முடிவுகள் குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கை சூசகமாக தெரிவிக்க வேண்டும் என இந்தியா கருதுவதாகவும், புதுடெல்லியின் அந்த நிலைப்பாட்டை நிருபமா ராவ் தனது கொழும்பு விஜயத்தின் போது இங்குள்ள அதிகார வர்க்கத்திடம் அழுத்தம், திருத்தமாகத் தெரியப்படுத்துவார் எனவும் கூறபடுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com