Sunday, February 7, 2010

ஜனாதிபதிக்கு ரஸ்யாவில் கலாநிதி விருது.

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஸ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அந்நாட்டின் Peoples’ Friendship University (PFU) எனும் பல்கலைக்கழகம் அவர் உலக சமாதானத்திற்காகவும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவும் செய்த சேவையை பாராட்டுமுகமாக நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் Honoris Causa Doctorate எனும் பட்டத்தினை வழங்கியுள்ளது. மேற்படி கௌரவ விருதானது குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தினால் இதுவரை உலகளாவிய ரீதியில் 5 ஜனாதிபதிகளுக்கும் 2 பிரதம மந்திரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நாளை திங்கட் கிழமை ரஸ்ய ஜனாதிபதி Dmitry Medvedev அவர்களை ஜனாதிபதி சந்தித்து பேசவுள்ளார். அதே நேரம் இலங்கைக்கு ரஸ்ய அரசாங்கத்தினால் ஆயுத கொள்வனவுக்காக வழங்கப்படவுள்ள 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான ஒப்பந்தம் ரஸ்ய வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்தாகவுள்ளது.



1 comments :

Anonymous ,  February 7, 2010 at 6:36 PM  

Well done Russia.MR is our president.What he receives is a great respect to our country given
by supergrade powerful nation.Thank you Russia.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com