Sunday, February 7, 2010

மெல்ல மெல்ல தேர்தல்வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி தரச்சொல்லுமே .......! - சதா. ஜீ.

'எதிரி எங்களை ஆழ்கிறான் எதிரி எங்களை ஆக்கிரமிக்கிறான் எதிரி எங்களுக்கு' என்று 'ஈயைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி' தமிழனின் காதிலும் பூச்சுற்றும் பூசாரி பின்கதவால் போய் எதிரியுடன் சேந்து 'விஷ்கிக்கு சோடாக கலந்து அடிச்சால் நல்லமா? அல்லது ஐஸ்கட்டி போட்டு அடிச்சால் நல்லமா?' என்று காரசாரமா விதாதித்துவிட்டு விடியேக்க பேப்பரத் திறந்தால் 'தமிழர்களின் சுயாட்சி, தமிழ் பிரதேசங்களில் தமிழர்களின் நிர்வாகம் ஆகியவற்றை வலியுறுத்தியது கூத்தமைப்பு' என்றிருக்கும். அங்கு உண்மையில் வயிற்றுவலியில் சம்பந்தனையா கக்கூசுக்க இருந்து முக்குவார், இரவு தின்ற சூடான கோழியால.

பொதுத் தேல்தலுக்கு கூத்தமைப்பு என்ன கூத்தாடும் என்று பார்ப்பதற்கு முதல், கொழும்பு மட்டும் தமிழீழ வரைபடம் நீண்டிருக்கிறது. அதாவது வடகிழக்கில் மகிந்தவின் சிந்தனையை நிந்தித்து சரத் பொன்சாகாவை ஆதரித்ததின் மூலம் தமிழ் மக்கள் தெளிவான முடிவினை தெரிவித்திருக்கிறார்களாம். அதேபோல கொழும்பு உட்பட சுற்றுப்புறங்களில் வாழும் தமிழர்களும் மகிந்தவின் சிந்தனையை நிந்தித்து சரத்தை ஆதரித்ததின் மூலம் வடகிழக்கு மற்றும் கொழும்புத் தமிழர்கள் எல்லோரும் இணைந்திருக்கிறார்களாம். அதாவது கூத்தமைப்பின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து கொழும்புத் தமிழர்களும் சரத்பொன்சேகாவை ஆதரித்ததாக கூத்தமைப்பு புகழாங்கிதம் கொள்கிறது.

எமக்கிருக்கிற ஒரே ஒரு ஆறுதல் கூத்தமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கித்தான் தென்பகுதி சிங்கள மக்களும் சரத்துக்கு வாக்குகளை குவித்தார்கள் என்று சொல்லவில்லை என்பதுதான்.
பொதுத் தேர்தலில் கூத்தமைப்பு வடக்கு கிழக்கில் தனித்தே போட்டியிடும். ஜனாதிபதித் தேர்தலில் 'அவரை ஆதரிக்கிறோம்' என்று சொல்லியது மிகமிக இலகுவானது. ஏனெனில் கூத்தமைப்பு சுட்டிக்காட்டியவர் வென்றால் தங்களுடைய 'பவர்' என்று மார்தட்டிக்கொள்வது. தோற்றால் 'மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' என்று தட்டிகழித்துவிடுவது.

ஆனால் பொதுத் தேர்தல் கூத்தமைப்புக்காரரின் வாழ்வோடு விளையாடுவது போல. அவரவர் களத்தில் இறங்கவேண்டும். இனப்பிரச்சினையென்னும் சிரங்கை யார் யார் கெட்டித்தனமாக சொறிந்துவிடுகிறார்களோ அவர்களுக்கே பாராளுமன்ற கதிரை! இந்த சிரங்கை சிறப்பாக சொறிந்துவிடுவதில் முதன்மையானவர்களும் முன்னிலை வகிப்பவர்களுமான கூத்தமைப்பு தனித்துப்போட்டியிடும் என்பதில் எவருக்கும் எந்த ஐயமும் எழத்தேவையில்லை.

பல பழங்களைத் தின்று கொட்டைகளைப் போட்டுக்கொண்டிருக்கும் சம்பந்தனாகட்டும் அல்லது இப்பத்தான் கொட்டையை சூப்பிக்கொண்டிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், குதிரை – கதிரை பொன்னம்பலங்கள் வரை சொறிந்துவிடுவதில் கெட்டிக்காரர்கள். வாயில் வாணீர் ஊற சொறிவின் சுகத்தை அனுபவிக்கும் தமிழன் சொறிவின் எரிவையும் வேதனையையும் அனுபவிக்கும்போது சம்பந்தன் போய்சேர்ந்திருப்பார்! சம்பந்தன்ர இடத்துக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் வந்திருப்பார்! இதுதான் அரசியல் விலாங்கியல்!

இனி இந்த 22 கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் யார் யாரை கழட்டிவிடப்போகிறார்கள் என்பது தொடர்பான சிறிய அனுமானம்: இணக்கப்பாட்டு அரசியலுக்கு முதல்காலடி எடுத்துவைக்கத் துணிந்த கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் கூத்தமைப்பு வேட்பாளர்களாக களத்தில் நிற்கப்போதில்லை.

கதிரைக் கஜேந்திரன் தப்பினார். அவருடைய முதலாவதும் முதன்மையானதுமான தகுதியே அவரொரு மேட்டுக்குடி குடிமகன். போனஸாக அவருக்கு ஆங்கிலமும் சிங்களமும் சரளமாகக் கதைக்கக்கூடியவர் கொஞ்சம் தமிழும் தெரியும். பாவம் குதிரைக் கஜேந்திரன் தான். சிறுபிள்ளைத் தனமான பேச்சாலும் குரங்குச் சேட்டையாலும் இவருக்கு ஆப்புத்தான். ஆனாலும் இதிலொரு சிக்கல் இருக்கிறது.

கூத்தமைப்பு, பத்தமினி சிதம்பரநாதனை கழட்டிவிடவே இறுதிவரை முயற்சிக்கும். இருப்பினும் ஓரளவுக்கு பிரபல்யம் அடைந்துவிட்ட பெண் வேட்பாளர், ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக சிதம்பரநாதனின் துணைவியார். சிதம்பரநாதன் யாரென்று தெரியுமோ? (தெரியாட்டில் யாழ்ப்பாணத்துக்கு போனப்போட்டு கேட்டால் தெரியும்) பத்மினி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டால் அவர் தனக்குத் துணையாக குதிரைக் கஜேந்திரனையும் வேட்பாளராக நியமிப்பதற்கு தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்ப குதிரைக்கும் பத்மினிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்? உங்களின் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது அவ்வளவுதான்.

புரட்சி 'வண்டி'க்காரன் சுரேஸின் நிலமை என்ன? என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் அரசியலை உன்னிப்பாக கவனித்தாலும் அரசியல்வாதிகளை கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம். சம்பந்தன் படுக்கைக்கும் கக்கூசுக்கும் மட்டும்தான் தனிமையில்போகிறார். மற்றுப்படி எந்நேரமும் சுரேஸ் ஒட்டிக்கொண்டுவிடுகிறார். ஒருவேளை வரப்போகும் பொதுத்தேர்தலுக்கு பிறகு நடைபெறும் பொதுத்தேர்தலில் சம்பந்தன் இருந்தால் சுரேஸின் தயவை நாடவேண்டியேற்படலாம் யார் கண்டார்?

இன்னொரு சுவாரசியமும் நடைபெறவுள்ளது. கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி இக்கூட்டத்துடன் ஒட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு. ஆனந்தசங்கரியும் சம்பன்தனும் நெருக்கமான நண்பர்கள். இடையில் தமிழ்செல்வனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் ஆனந்தசங்கரி காழ்ப்புணர்வு கொண்டிருந்தாலும் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. விடுபட்ட நெருக்கம் மீண்டும் இணைந்திருக்கிறது. ஆயுதம் தாங்கிய முன்னாள் பிரமுகர் என்றால் ஆனந்தசங்கரிக்கு அலேர்ஜி என்றாலும் 'என்னுடன் வாப்பா' என்று சம்பந்தன் ஆசையாக அழைப்பதை ஆனந்தசங்கரியால் தட்டமுடியுமென்றா நினைக்கிறீர்கள்?

கூத்தமைப்பு உறுப்பினர்கள் இனவாதப் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது, தமிழ் மக்களின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம் எனும் ஆனந்தசங்கரி தமிழ் மக்கள்மீது அக்கறைகுடையவராக இருந்தாலும், அவருக்கு பாராளுமன்றக் கதிரையில்லாமல் கை சும்மாயிருக்காது எனவே அவருக்கிருக்கிற ஒரே தெரிவு சம்பந்தனுடன் ஊடல்கொள்வதுதான். இன்னொரு தெரிவும் இருக்கிறது. கூட்டணியின் பெயரிலேயே தேர்தல் களமிறங்குவது. இது சென்றமுறை பொதுத் தேர்தலைப்போல காலைவாரிவிடாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

இவ்விடத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்டலாம். சம்பந்தனும் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய சிறிய அக்கறையுடையவராக இருந்தாலும் அவருடன் கூட இருப்பவர்களின் கிடுங்குப்பிடியினால் அவரால் இனவாதசகதியிலிருந்து விடுபடமுடியாது ஒன்று, இரண்டு தமிழ் இனவாத ஊடகங்களின் அனுக்கிரகம் இருந்தால்தான் தான் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் பிரகாசிக்க முடியும் என்ற சூழ்ச்சியைவிட்டு வெளியேறத் துணியாதவர்.

எனவே இதில் கூத்தமைப்பில் சார்பில் 'முக்கிய' புள்ளிகள் பாராளுமன்றம் தெரிவாவர்கள். சுத்திச் சுத்தி சுப்பற்ர கொல்லேக்க என்பதுபோல தமிழ் மக்கள் சுப்பற்ர கொல்லேக்க அனாதரவாக விடப்படுவார்கள். தமிழர்கள் உணர்ச்சிகளுக்கு இலகுவாக அடிமைப்படக்கூடியவர்கள். எப்போ அவன் உணர்ச்சிகளை கைவிட்டு அறிவுரீதியாக சிந்தித்து செயற்படுவானோ அப்போதுதான் அவனது விடுதலையென்பது சாத்தியப்படும்.

இதில் இன்னுமொன்றையும் சுட்டிக்காட்டலாம், யூஎன்பி ஆட்சியமைக்க கூத்தமைப்பின் தயவு வேண்டியிருந்தால் கூத்தமைப்பு தாராளமாகவே 'அதைக்'கொடுக்கும். ஜனாதிபதி ராஜபக்சவுக்கு 'கடிவாளம்' போடத்தான் நாம் யூஎன்பிக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று இலிச்சவாயன் காதில பூச்சுற்றுவார்கள் என்பது திண்ணம்.

மேற்கூறிய தமிழினவாத அரசியல்போக்கை எதிர்த்து நிற்கக்கூடிய சக்தி தமிழர் பக்கமும் இருக்கிறது ஆனால் அது ஒன்றுதிரட்டமுடியாத துர்ப்பாக்கிய நிலைமையே இன்றுவரை நிலவுகிறது. ஈபிடிபி, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எவ் - பத்மநாபா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டுத் தலைமையின் கீழ் செயற்படவும் தேர்தலில் தமிழ் இனவாத கூத்தமைப்பை எதிர்த்து நிற்கக்கூடியதுமான இச்சக்திகளை ஒன்றிணைப்பதில் பல சிக்கல்கள் இல்லை. ஒன்றிரண்டு சிக்கல்களே இருக்கின்றன. அதுவும் இச்சக்கதிகளின் அரசியல் சித்தாந்தத்தில் இவ்வாறான சிக்கல்களுக்கு இடமேயில்லை. ஆனாலும் .......

ஈபிடிபி என்றால் அது அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாதான். பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் பாசறையில் வளர்ந்தவர். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து அரசியலில் பிரவேசித்தனர். அன்று அவர்களுக்கு ஏற்பட்ட சொல்லொனா துன்பங்களையும் துயரங்களையும் நாம் அறிவோம். அதிலிருந்து விடுபடுவதற்காக எடுக்கப்பட்ட அரசியல் நகர்வுகளை அரசியல் அல்லாத நகர்வுகளையும் நாமறிவோம். போற்றுதலின்றிய தூற்றுதலுக்கு தனிமனிதனாக நின்று போராடிய பெருமை டக்ளசையே சேரும்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல ஈபிடிபி, அதேபோல டக்ளஸ் தேவானந்தாவும். 90களிலேயே தீர்கதரிசனமான இணக்கப்பாட்டு அரசியலுக்கு வந்துவிட்ட டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை மேற்கூறிய இரண்டு கட்சிகளுடனாவது இணக்கப்பாடு கொள்ள துணியவில்லை. அரசியல் முன்னகர்வுக்கு டக்ளஸ் சிலவேளைகளில் பின்னின்றாலும் ஈபிடிபி தொடர்பாக நட்பு ரீதியான அணுகுமுறையையே முற்போக்கான அரசியலாளர்கள் கடைப்பிடித்துவருகிறார்கள் என்பதை டக்ளஸ் தேவானந்தா நன்கு அறிந்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் இவர்களை ஒன்றிணைத்து போட்டியிட பல நட்பு சக்திகள் முயற்சித்தன. அது கைகூடியிருந்தால் குறைந்தது இரண்டுக்கு மேற்பட்ட பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும் என்பது பலரது ஆணித்தரமான நம்பிக்கை.
இம்முறையும் டக்ளஸ் தேவானந்தா பொதுத் தேர்தலில் தனித்துப்போட்டியிடத்தான் தீர்மானிக்கக்கூடும். ஒன்றிணைப்பதில் பொறுமையாக முயற்சிப்போம். அல்லது பொறுத்திருந்து பார்ப்போம்.

புளொட் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. தற்போதைய தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் 'எமது கைகள் கறைபடிந்ததுதான் ஆனால் இனிமேலும் அதனை கறைபடியாமல் பார்த்துக்கொள்வோம்' என்று தனது அரசியல் பக்குவத்தை வெளிக்காட்டியிருக்கிறார். புளொட்டின் கடந்தகால கடுமையான செயற்பாடுகள் எல்லோர் மனதிலும் நெருடிக்கொண்டிருந்தாலும் புளொட் கடுமையான உழைப்பின் மூலம் மக்களின் மனங்களை வெல்லவேண்டும்.

ஈபிஆர்எல்எவ் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்ளையும் மக்களின் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொண்டது. பாராளுமன்றக் கதிரைக்காக 'துறந்து'விட்டு ஓடியகளின் பின்னர் ஈபிஆர்எல்எவ் - பத்மநாபா ஆயுதங்களை முற்றாக கையளித்து இன்று அரசியல் பணியில் மட்டும் தனது கவனத்தை செலுத்திவருகிறது. முற்போக்கான அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும் மக்கள் நலனில் மிகுந்த அக்கறைகொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அவர்களின் அரசியல் செயற்பாடுகள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனாலும் சக்திவாய்ந்த அமைப்பாக மட்டக்களப்பில் செயற்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கைப்பொறுத்தவரை ஈபிடிபி, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எவ் - பத்மநாபா ஆகியன ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதுதான் சாலமும் சிறந்தது. இவர்கள் ஒன்றிணைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. 'இலந்த முள்ளைத் திருப்பினாலும் இவர்களைத் திருத்த முடியாது' என்று வாளாதிருக்க முடியாது. கடந்த பொதுத் தேர்தலில் முயற்சித்த சக்திகள் மீண்டுமொருமுறை இவர்களை ஒன்றிணைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இவர்களை ஒன்றிணையுமாறு பலவழிகளிலும் முன் முயற்சிகள் - வற்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் கூத்தமைப்பிற்கு சவலான ஒரு அரசியல் சக்தியை நாம் களமிறக்க முடியும்.

கட்டுரையாளர் வாசகர்களின் விமர்சனங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றார். Comment பகுதிக்கு சென்று பதிவு செய்யலாம். தமிழில் பதிவு செய்ய விரும்புவோர் யுனிகோட் அல்லது தாம் விரும்பிய Font இல் எழுதி விட்டு அதை யுனிகோட்டுக்கு மாற்றி copy செய்து comment க்கான பெட்டியில் Paste செய்து Publish செய்து விடவும்

1 comments :

Anonymous ,  February 7, 2010 at 4:38 PM  

intha aakkathil mahinthavin pukal padakkanam.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com