Friday, February 19, 2010

உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்: ஐநா

உலகம் முழுவதிலும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று ஐநாவின் வேளான் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பு (ஐஎஃப்ஏடி) தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் 33வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் புதன் கிழமை அன்று ரோம் நகரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கனாயோ வான்ஸ் பேசுகையில், 'உலகளவில் பசியால் வாடும் மக்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 10 கோடி அளவை தாண்டியிருக்கிறது. உலகில் விவசாயத்தை மேம்படுத்துவது தான் இந்த மக்களின் பசியை போக்குவதற்கான சிறந்த வழியாக நாங்கள் கருதுகிறோம்.

பசியோடு இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஆபத்தான நச்சு கலந்த உணவை உண்பவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. விவசாயத்தை பெருக்குவதன் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதோடு, பசியையும் அகற்ற முடியும்' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com