Tuesday, December 29, 2009

ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதியுடனேயே நேரடிவாதத்திற்கு தயார். அனுரகுமார

சிங்கம் சிங்கத்துடன் மோதும் : மலம் தின்னும் பண்டியுடன் அல்ல விமலுக்கு அடி.
இலங்கை இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தத்தில் ஜெனரல் பொன்சேகாவின் மகன் ஈடுபட்டுள்ளதாக வெளிவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்க தெரிவித்த சரத் பொன்சேகாவின் ஊடக ஒருங்கிணைப்பாளரும் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நேரடி விவாதத்தில் கலந்துகொள்ள எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், சிங்கம்ஒன்று சிங்கமொன்றின் சவாலை எதிர்கொள்ளும் எனவும் பண்டியுடன் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com